உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரியில் 30ம் தேதிஅஞ்சல் குறைகேட்பு

புதுச்சேரியில் 30ம் தேதிஅஞ்சல் குறைகேட்பு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களின் அஞ்சல் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி புதுச்சேரியில் நடக்கிறது.இது குறித்து புதுச்சேரி மண்டல முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் இன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களின் அஞ்சல் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியிலுள்ள அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.அஞ்சல் துறை சேவையில் பதிவுத் தபால், பார்சல், மணியார்டர், விரைவு தபால் மற்றும் இதர குறைகள் இருப்பின் நேரில் வந்து எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி