உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம், திண்டிவனம் சேர்மன்அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

விழுப்புரம், திண்டிவனம் சேர்மன்அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

விழுப்புரம்:விழுப்புரம், திண்டிவனம் நகர் மன்ற சேர்மன் பதவிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக வழக்கறிஞர் பாஸ்கரன் அறிவிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் நகரப் பகுதியைச் சேர்ந்த இவர் பி.எஸ்.சி., பி.எல்., படித்துள்ளார். இவரது தந்தை கோபாலன், தாய் ராணியம்மாள். 47 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.கல்லூரி பருவத்திலிருந்து அ.தி.மு.க., மாணவரணி பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் ஜெ., அணியிலும் பொறுப்புகளை வகித்துள்ளார். அதன் பின் மாவட்ட பொருளாளர், துணை செயலாளர், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் பொறுப்புகளில் இருந்துள்ளார். கடந்த முறையும், தற்போதும் விழுப்புரம் நகர செயலாளராக உள்ளார்.திண்டிவனம் நகர் மன்ற சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ., படித்துள்ளார். இவரது மனைவி சாவித்திரி முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர். வெங்கடேசன் தற்போது கவுன்சிலராக உள்ளார். மூத்த மகன் அருண் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் கார்த்திக் பிளஸ் 2 படிக்கிறார். வெங்கடேசன் கல்லூரி மாணவரணி அமைப்பாளராகவும், நகர இளைஞரணி செயலாளர், ஜெ.,பேரவை செயலாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது அ.தி.மு.க., நகர செயலாளராக உள்ளார்.இவர் கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி