உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நகராட்சியில்பெண்களுக்கு 11 வார்டுகள்

திண்டிவனம் நகராட்சியில்பெண்களுக்கு 11 வார்டுகள்

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சியில் 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சியில் கடந்த தேர்தலில் இருந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 1,6, 13,14,19,23, 26,29,33 ஆகிய 9 வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும், 17,18 வார்டுகள் எஸ்.சி., பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 22 வார்டுகளிலும் பொதுப் பிரிவினர் போட்டியிடலாம். நகராட்சி ஆணையர் தேர்தல் அதிகாரியாக இருந்து சேர்மன் வேட்பாளர் மனுக்களை பெற உள்ளார்.உதவி தேர்தல் அதிகாரிகளான மேலாளர், சுகாதார அலுவலர், கட்டட ஆய்வாளர் ஆகிய மூவரும் தலா 11 வார்டுகளில் கவுன் சிலர் பதவிக்கான மனுக்களை பெற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ