உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., தனித்து நிற்பது புதுசு இல்லைதொண்டர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

தே.மு.தி.க., தனித்து நிற்பது புதுசு இல்லைதொண்டர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

உளுந்தூர்பேட்டை:அனைத்து கிராமங்களிலும் முரசு சின்னத்தை வரைந்து தேர்தலுக்கு தயாராகுமாறு தே.மு. தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.உளுந்தூர்பேட்டை அடுத்த சிறுபாக்கத்தில் நடந்த தே.மு.தி.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங் கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது :தமிழகத்தில் தி.மு.க., துவங்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சட்டசபையில் பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது. தே.மு. தி.க., 2005ல் துவங்கி பல்வேறு தடைகளையும் மீறி 2011ல் வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் உருவெடுத்திருக்கிறது.வரும் உள்ளாட்சி தேர்தலில் நாம் தனித்து நிற்போமா? அல்லது கூட்டணியில் போட்டியிடுவோமா என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். தேர்தலில் தனித்து நிற்பது நமக்கு புதுசு இல்லை, பழசு. ஆனால் கூட்டணி தான் நமக்கு புதுசு.அனைத்து கிராமங்களிலும் தே.மு.தி.க.,வினர் முரசு சின்னத்தை வரைந்து தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும்.இவ்வாறு மாவட்ட செயலாளர் வெங்கடே சன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி