உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகாபாரதி இன்டர்நேஷனல்சிபிஎஸ்சி பள்ளிக்கு அடிக்கல்

மகாபாரதி இன்டர்நேஷனல்சிபிஎஸ்சி பள்ளிக்கு அடிக்கல்

கள்ளக்குறிச்சி:மகாபாரதி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.சின்னசேலம் மகாபாரதி பொறியியல் கல்லூரி அறக்கட்டளையும், கனியாமூர் சக்தி கல்வி அறக்கட்டளையும் ஒருங்கிணைந்து மகாபாரதி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி துவக்குகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் புறவழிச்சாலை அருகில் சிபிஎஸ்சி பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவிற்கு மகாபாரதி பொறியியல் கல்லூரி தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மகாசக்தி அறக்கட்டளை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 2012-13ம் கல்வியாண்டில் இப்பள்ளி துவக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி