உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., ஓட்டு சேகரிப்பு தியாகதுருகத்தில் பரபரப்பு

தே.மு.தி.க., ஓட்டு சேகரிப்பு தியாகதுருகத்தில் பரபரப்பு

தியாகதுருகம்:தியாகதுருகம் தே.மு.தி.க.,வினர் நேற்று காலை வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உள்ளாட்சி அமைப்பில் உள்ள பெரும்பாலான பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., சில தினங்களுக்கு முன் வெளி யிட்டுள்ளது. இது கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான தே.மு.தி.க., விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க., வும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.இத்தேர்தலில் தே.மு.தி.க.,- அ.தி. மு.க., கூட்டணி பிரியும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தே.மு.தி. க.,வினர் கட்சி தலைமையின் உத்தரவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தியாகதுருகம் தே.மு.தி.க., வினர் நேற்று காலை 10 மணிக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் திடீர் பிரசாரத்தில் இறங்கினர். நகர செய லாளர் முருகன், முன் னாள் மாவட்ட துணை செயலாளர் தாமுசக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தே.மு.தி.க., வினர் ஓட்டு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ