உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தியாகதுருகம் அ.தி.மு.க.,வில்வேட்பாளர் தேர்வில் அதிருப்தி

தியாகதுருகம் அ.தி.மு.க.,வில்வேட்பாளர் தேர்வில் அதிருப்தி

தியாகதுருகம்:தியாகதுருகம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளரை மாற்ற வேண்டுமென் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தியாகதுருகம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக ராஜேஸ்வரி என்பவரை கட்சி தலைமை அறிவித்துள்ளது. இவர் நகர பொருளாளர் வெங்கடாஜலபதியின் மனைவியவார். நகர அ.தி.மு.க., வில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர் கட்சியின் எந்த நடவடிக்கையிலும் கலந்து கொள்வதில்லை. கட்சி விழாக்களிலும் பங்கேற்றதில்லை என்று கட்சி தொண்டர்கள் தரப்பில் புகார் எழுந்தது.இதனால் நகர செயலாளர் ராஜூ மற்ற நிர்வாகிகளின் ஆதரவுடன் கட்சியின் வளர்ச்சிப்பணிகளில் இப்பகுதியில் ஈடுபட்டு வந்தார். பேரூராட்சி தலைவர் பதவி இவரது மனைவி விஜயாவுக்கு ஒதுக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் வெங்கடாஜலபதி மனைவி ராஜேஸ்வரிக்கு சீட் தரப்பட்டுள்ளதால் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.இது குறித்து கட்சி தலைமைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதால் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி