உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில் 33 பெண் ஊராட்சி தலைவர் பதவி

உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில் 33 பெண் ஊராட்சி தலைவர் பதவி

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியங்களில் 33 ஊராட்சிகளில் பெண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியங்களில் 97 ஊராட்சிகளில் 33 ஊராட்சிகளில் பெண் தலைவர் பதவிக்கு போட்டி நடக்கிறது. பேரூராட்சி யில் 18 வார்டுகளில் 6 வார்டுகளுக்கு பெண்கள் போட்டியிடுகின்றனர். உளுந்தூர்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது. இதில் 23, 25 வார்டு(தனி), 10, 16 வார்டு(தனி-பெண்), 3, 5, 8, 17 வார்டு (பொது- பெண்), மற்றவை பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 53 ஊராட்சி தலைவர், 402 வார்டு உறுப்பி னர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடக்கின்றன.மழவராயனூர், தானம், காட்டுஎடையார், கூவாடு, குஞ்சரம், நெடுமானூர், உ.குணலவாடி, கொள்ளூர், புத்தமங்கலம், வீரமங்கலம் கிராமங்கள் (தனி) ஊராட்சிகளாகவும், அங்கனூர், எல்லைகிராமம், எஸ்.மலையனூர், சிக்காடு, திருப்பெயர், செம்பியமாதேவி கிராமங்கள் (தனி-பெண்) ஊராட்சிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆசனூர், தாமல், குணமங்கலம், பாலி, பரிந்தல், பெரியகுறுக்கை, பிடாகம், பின்னல்வாடி, பு.மலையனூர், ஆர்.ஆர்.குப்பம், வெள்ளையூர், எம்.குன்னத்தூர் கிராங்கள் பொது-பெண் ஊராட்சிகளாகவும் மற்றவை பொது ஊராட்சிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.திருநாவலூர் ஒன்றியத்தில் 44 ஊராட்சி தலைவர், 330 வார்டு உறுப்பினர், 20 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடக்கின்றது. உ.நெமிலி, குவாகம், கூ.கள்ளக்குறிச்சி, திருநாவலூர், பா.கிள்ளனூர், ஆரியநத்தம், கிழக்குமருதூர், சேந்தநாடு கிராமங்கள் (தனி) ஊராட்சிகளாகவும், கொரட்டூர், பரிக்கல், நன்னாரம், பெரும்பாக் கம், செங்குறிச்சி (தனி-பெண்) ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.மதியனூர், டி.ஒரத்தூர், களவனூர், மேப்புலியூர், சோமாசிபாளை யம், பாதூர், ஆத்தூர், களமருதூர், காம்பட்டு, சிறுத்தனூர் கிராமங்கள் (பொது-பெண்) ஊராட்சிகளாகவும், மற்றவை பொது ஊராட்சிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை