உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., வேட்பாளர்கள்விழுப்புரத்தில் அறிமுக ஊர்வலம்

தே.மு.தி.க., வேட்பாளர்கள்விழுப்புரத்தில் அறிமுக ஊர்வலம்

விழுப்புரம்:தே.மு.தி.க., விழுப்புரம் மாவட்ட வேட்பாளர்கள் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., விழுப்புரம் நகராட்சி சேர்மன் வேட்பாளராக துரைசாமி, திண்டிவனம் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி சுப்ரமணி அறிவிக்கப்பட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் வேட்பாளர்கள் துரைசாமி, வெங்கடேசன், சுப்ரமணி அறிமுக ஊர்வலம் சென்றனர். விழுப்புரம் தே.மு.தி.க., அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகளுக்கு வேட்பாளர்கள் மாலை அணிவித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட துணை செயலாளர்கள் சிவா, நகர செயலாளர் பாபு, அவைத் தலைவர் ஆதவன் முத்து, பொருளாளர் கணேஷ், காதர்பாட்ஷா, விநாயகம், சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் பாலகுரு, ராமச்சந்திரன், மாணவரணி துணை செயலாளர் பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை