உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வல்லம் ஒன்றியத்தில்திட்ட அலுவலர் ஆய்வு

வல்லம் ஒன்றியத்தில்திட்ட அலுவலர் ஆய்வு

செஞ்சி:வல்லம் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் பார்வையிட்டார்.வல்லம் ஒன்றியத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், வெள்ள நிவாரண திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், ஊரக குடியிருப்பு திட்டம், மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் முத்து மீனாள் பார்வையிட்டார்.சாலை பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். மகளிர் சுகாதார வளாகங்களை பராமரிக்க வசதியாக உபயோகிப்பாளர் குழு அமைக்கும் படி பி.டி.ஓ.,க்கள் கலியமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஒன்றிய பொறியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை