உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சி.ஐ.டி.யூ., மாநில கோரிக்கை மாநாடு

சி.ஐ.டி.யூ., மாநில கோரிக்கை மாநாடு

விழுப்புரம் : சி.ஐ.டி.யூ., சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் மோட்டார் ஆபரேட்டர், துப்புரவு தொழிலாளர்களின் மாநில சிறப்பு கோரிக்கை மாநாடு விழுப்புரத் தில் நடந்தது. மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜீவா, உள்ளாட்சி ஊழியர் சங்க மாநில தலைவர் மூசா, பொதுச் செயலாளர் கணேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். எம். எல்.ஏ., ராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில தலைவர் சண்முகம், செயலாளர் பாலசுப்ரமணியன் பேசினர்.ஊராட்சிகளில் பணிபுரியும் மோட்டார் ஆபரேட்டர், துப்புரவு தொழிலாளர் களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் உதயகுமார், செயலாளர் குமார், பொருளாளர் ஷேக்சலாவுதீன், துணை தலைவர்மூர்த்தி, செயலாளர்கள் அம்பிகாபதி, பாலகிருஷ்ண் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி துப்புரவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்வதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை