உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நரசிங்கபுரத்தில் வீணாகிவரும் அரசு கட்டடம்

நரசிங்கபுரத்தில் வீணாகிவரும் அரசு கட்டடம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நரசிங்கபுரத்தில் பாழடைந்துள்ள தாசில்தார் குடியிருப்பு கட்டடம் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறி வருகிறது. விழுப்புரம் நரசிங்கபுரம் பகுதியில் தாசில்தார் குடியிருப்பு கடந்த 15 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்டது. இந்த குடியி ருப்பிற்கு போதிய பாது காப்பு இல்லாததால் அதிகாரிகள் குடி யேற தயக்கம் காட்டி வந்தனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தாசில் தார்கள் அங்கு தங்குவதில்லை. பாழடைந்த நிலையில் இருந்த இக்கட்டடத்தின் ஜன்னல், கதவுகளை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து சென்று விட்டனர். இக்கட்டடத்தில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. மேலும் கால்நடைகளும் தஞ்சம் அடைந்துள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இக் கட் டடம் மற்றும் காலிமனை கடந்த 10 ஆண் டிற்கு மேலாக பயனற்று கிடக்கிறது. அரசு சார்பில் அந்த இடத்தில் ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளிட்ட பயன் பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ