உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

திண்டிவனம் : திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.திண்டிவனம் ரோஷனை தாய்த் தமிழ் பள்ளியில் நடந்த விழாவிற்கு சிறப்பு தலைமை ஆசிரியர் வரதராஜலு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிள்ளி வளவன் வரவேற்றார். பள்ளி தாளா ளர் பேராசிரியர் கல்யாணி அறிமுகவுரையாற்றினார். முத்தரசு, ரவிகார்த்திகேயன், ஜவகர், நசீர் அகமது, ஆசிரியை இன்பஒளி வாழ்த்தி பேசினர். பேராசிரியர் அனில் சத்கோபால், சுப்ரமணியன், முகுந்த் துபே ஆகியோர் எழுதிய கல்வி உரிமைச்சட்டம், நாம் ஏமாற் றப்பட்டக் கதை என்ற ஆங்கில நூலை, பேராசிரியர் கோச்சடை தமிழ்படுத்திய நூலை பொறியாளர் துரைக்கண்ணு வெளியிட்டார். இதனை முன்னாள் வங்கி அலுவலர் வீரபாகு பெற்றுக் கொண்டார். கவுன்சிலர் பூபால் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை