உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கெடிலம் பகுதியில் விபத்து அதிகாரிகள் சமரசக் கூட்டம்

கெடிலம் பகுதியில் விபத்து அதிகாரிகள் சமரசக் கூட்டம்

உளுந்தூர்பேட்டை : கெடிலத்தில் தொடரும் சாலை விபத்துக்களை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசக் கூட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த கல்சிறுநாகலூரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் குமரேசன்,3 என்ற சிறுவன் நேற்று முன்தினம் இரவு கெடிலம் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி இறந்தான். அப்பகுதியில் தொடர் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப் பிரச்னை குறித்து உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை சமரச கூட்டம் நடந்தது. தாசில்தார் வாசுதேவன், டி.எஸ்.பி., சிவநேசன் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தரப்பில் பாõஸ்கர், செல்வராஜ், செழியன், வருணன் உள்ளிடோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விபத்துக்களை தவிர்க்க ஹைமாஸ் விளக்கு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ