உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி தொகுதியில் தே.மு.தி.க.,தோல்விக்கு அ.தி.மு.க.,வினரின் குழி பறிப்பு தான் காரணம்

செஞ்சி தொகுதியில் தே.மு.தி.க.,தோல்விக்கு அ.தி.மு.க.,வினரின் குழி பறிப்பு தான் காரணம்

செஞ்சி : வல்லம் ஒன்றிய தே.மு. தி.க., செயல்வீரர்கள் கூட்டம் செஞ்சியில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளரான வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது : செஞ்சி தொகுதியில் போட்டியிட்ட சிவா தோல்வியடைந்ததற்கு என்னையும், சிவாவையும் விட கட்சி தலைவர் விஜயகாந்த் மிகவும் வருந்தினார். 1972ல் இருந்து அ.தி.மு.க., கோட்டையாக இருந்த கிளைகளில் ஓட்டுக்கள் குறைந்து தோல்வி ஏற்பட்டதற்கு சில சுயநல அரசியல் வாதிகளே காரணம். நாம் வஞ்சிக்கப்பட்டதை நினைக்கும் போது கோபம் வருகிறது. சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இரு என விஜயகாந்த் அடிக்கடி என்னிடம் சொல்வார். அதன் அர்த்தம் இந்த தேர்தலில் தான் தெரிந்தது. பல தேர்தல்களை கண்ட அரசியல் கட்சியினர் சட்டசபை தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க., தொண்டர்களின் உழைப்பை போல் எந்த கட்சி தொண்டர்களின் உழைப்பையும் பார்த்ததில்லை என்கின்றனர். தே.மு.தி.க., தொண்டன் குடிக்க கஞ்சி இல்லை என்றாலும் யாரிடமும் விலை போக மாட்டான். இதை மாற்று கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. உறவுக்கு கை கொடுப்போம். மக்கள் பிரச்னை என வரும் போது மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம். கிளைதேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தால் அந்த கிளை நிர்வாகி மாற்றம் செய்யப்படுவார். ஒன்றிய செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ