உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி

தாட்கோ மூலம் இலவச கனரக ஓட்டுனர் பயிற்சி

விழுப்புரம் : விழுப்புரம் தாட்கோ அலுவலகம் மூலம் அரசின் கனரக ஓட்டுனர் பயிற்சியை கலெக்டர் மணிமேகலை துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் கனரக ஓட்டுனர் பயிற்சிக்கான (ஐ.ஆர். டி.,) தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான கனரக ஓட்டுனர் பயிற்சி நேற்று காலை துவங்கியது. கலெக்டர் மணிமேகலை பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கநாதன், விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் பிரேம்குமார், துணை மேலாளர் கவுரி சங்கர், ஓட்டுனர் பயிற்சி ஆசிரியர்கள் லட்சுமணன், சேகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லிங்கன், தாட்கோ உதவி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி 3 மாதங்களுக்கு அரசு மூலம் இலவசமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்