உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 46 கிராம ஊராட்சிகள் உள் ளது. உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ ஊராட்சி செயலாளர்களிடம் வாக்காளர் பட்டியலை வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப் ஆனந்தராஜ், கருணாநிதி உடனிருந்தனர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 49 ஆயிரத்து 497 ஆண் வாக்காளர்கள், 47 ஆயிரத்து 652 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 97 ஆயிரத்து 149 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ