உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முகையூர் வாரசந்தை கட்டடம் பயனற்று கிடக்கும் அவலநிலை

முகையூர் வாரசந்தை கட்டடம் பயனற்று கிடக்கும் அவலநிலை

திருக்கோவிலூர் : முகையூர் வார சந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டடப் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் வீணாகிறது.முகையூரில் சனிக்கிழமை தோறும் வாரசந்தை நடப்பது வழக்கம். சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை சந்தையில் விற்பனை செய்வர். அத்துடன் காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வரும். இவர்கள் போக்குவரத்து மிகுந்த திருக்கோவிலூர்-விழுப்புரம் ரோட்டில் கடை விரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் சந்தையை கடந்து செல்வதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது.இக்குறையை போக்கவும், வியாபாரிகளுக்கு மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வகையிலும் சந்தை மேம்பாட்டு நிதியின் மூலம் வணிக வளாகம் கட்டப் பட்டது. பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளாகியும் திறக்கப் படவில்லை. தற்போது குடி பிரியர்களின் கூடாரமாக அந்த கட்டடம் மாறியுள்ளது.பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட இந்த கட்டடத்தை திறப்பதன் மூலம் வியா பாரிக ளுக்கு பாதுகாப் பான கடை கிடைக்கும். வாகன ஓட்டிகளை சிரமத் தில் இருந்து விடுவிக்க லாம். வணிக வளாகத்தை திறக்க ஒன்றிய அதிகா ரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ