மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
18 hour(s) ago
நாளை மின்தடை
18 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
18 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
18 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோகன், 25. இவரது மனைவி இளவரசி, 22. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது இளவரசியின் பெற்றோர் 7 சவரன் தங்க நகை, மொபெட், 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக அசோகனும், அவரது பெற்றோரும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த இளவரசி நேற்று முன்தினம் அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் அசோகன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago