உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் திருத்த பணி கலெக்டர் படிவம் வழங்கல் 

வாக்காளர் திருத்த பணி கலெக்டர் படிவம் வழங்கல் 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர் திருத்த பணியை கலெக்டர் ஆய்வு செய்து படிவம் வழங்கினார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி துவங்கி, ஓட்டுச்சாவடி முகவர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று காலை விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் நடைபெறும் பணியை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கினார். உதவி கலெக்டர் பயிற்சி வெங்கடேஸ்வரன், தாசில்தார் செல்வமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தமிழரசன், எஸ்.ஆர்.ஐ., மேற்பார்வையாளர் பாக்கியராஜ், வி.ஏ.ஓ., சுகுணா, ஓட்டுசாவடி நிலை அலுவலர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை