உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிளஸ் 2 தேர்வில் வி.ஆர்.பி., பள்ளி சாதனை

பிளஸ் 2 தேர்வில் வி.ஆர்.பி., பள்ளி சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது.விழுப்புரம் வி.ஆர்.பி.,பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மொத்தமுள்ள 179 மாணவ, மாணவியர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். மாணவி ரோகினி 596 மதிப்பெண் எடுத்து, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.தொடர்ந்து, மாணவர்கள் புகழ்முகிலன் 587, ரித்தீஷ் 587, மாணவி பாத்திமாபிவி 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கணிதம் பாடத்தில் 2 பேரும், உயிரியியலில் 2, கணினி அறிவியலில் 43, பொருளியலில் 2, கணினி பயன்பாடுகள் 4, இயற்பியல் 9, வேதியியல் ஒரு மாணவர் என மொத்தம் 63 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 570க்கு மேல் 35 மாணவர்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் சோழன் கவுரவித்தார்.தாசில்தார் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் அன்பு, ஜெயக்குமார், சுரேஷ்பாபு, வழக்கறிஞர் மனோ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை