மேலும் செய்திகள்
பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழா
10-Oct-2025
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் மா.கம்யூ., கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கண்டாச்சிபுரம் தாலுகா தண்டரை ஊராட்சியிலிருந்து அடுக்கம் ஊராட்சி வரை 1800 மீட்டர் நீளமுள்ள சாலைக்கு 1 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மற்றும் மா.கம்யூ., வினர் நில அளவீடு கோரி கண்டாச்சிபுரம் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். நிள அளவீட்டிற்காக சர்வேயர் நேற்று காலை வந்துளார். ஆனால் இடத்தினை அளவீடு செய்யாமல் திரும்பியுள்ளார். இதுகுறித்து பொதுமக்களுடன் மா.கம்யூ.,வினர் தாலுகா அலுவலகத்தில் கேட்டபோது, உரிய தகவல் அளிக்க மறுத்ததால் மாலை 3:00 மணி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் செந்தில், மாதர் சங்க வட்ட செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
10-Oct-2025