உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாகனங்களை சேதப்படுத்திய வழக்கு கோர்ட்டில் ஆஜராகாதவருக்கு வாரன்ட்

 வாகனங்களை சேதப்படுத்திய வழக்கு கோர்ட்டில் ஆஜராகாதவருக்கு வாரன்ட்

திண்டிவனம்: திண்டிவனத்தில் கடந்த 1999ல் நடந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்திய வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ளவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மதுரை, அவுனியாபுரத்தில், கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை கண்டிக்கும் வகையில், அன்றைய தினம் இரவு திண்டிவனம் நான்கு முனை சந் திப்பில் ஆயுதங்களுடன் கூடிய கும்பல் அந்த வழியாக வந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தியது. இந்த வழக்கில் திண்டிவனம் டவுன் போலீசார் 41 பேர் மீது வழக்குப் பதிந்தனர். வழக்கு திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11வது நபரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த அய்யாவு மகன் சாமுவேல் என்பவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு கோர்ட் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகும் சாமுவேல் தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து சாமுவேல், சம்மந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால், அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என முதலாவது மாஜிஸ்திரேட் மூலம் அறிவிக்க நேரிடும் என திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்