உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புறவழிச்சாலையில் கழிவுகள் அகற்றம்

புறவழிச்சாலையில் கழிவுகள் அகற்றம்

திண்டிவனம்: தினமலர் செய்தி எதிரொலியாக, திண்டிவனம் புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில், ஜக்காம்பேட்டை கூட்ரோடு, கர்ணாவூர் பகுதிகளில் வாழை மரங்கள், கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் புகைமூட்டம் ஏற்படுகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அப்பகுதிகளில் கொட்டியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை