உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புறவழிச்சாலையில் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி

புறவழிச்சாலையில் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி

திண்டிவனம்; திண்டிவனம் புறவழிச்சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் உள்ள ஜக்காம்பேட்டை கூட்ரோடு, கர்ணாவூர் பகுதிகளில் வாழை மரங்கள், கழிவுகள், குப்பைகள் கொட் டப்பட்டு வருகிறது. மேலும், குப்பைகள் தீயிட் டு கொளுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் புகைமூட்டம் ஏற் படுகிறது. இதனால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், புறவழிச்சாலையில் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ