பைக் மோதி காயமடைந்த வாட்ச்மேன் சாவு
மயிலம்:மயிலம் பகுதியில் பைக் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இறந்தார்.மயிலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம், 60; தனியார் கல்லுாரியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 25ம் தேதி இரவு 9:15 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.மயிலம் அருகே பின்னால் வந்த பிளண்டர் பைக், பரமசிவம் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பரமசிவம் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு இறந்தார்.மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.