உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நந்தன் கால்வாயில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

நந்தன் கால்வாயில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

செஞ்சி ; நந்தன் கால்வாயில் பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நீண்ட நாட்களாக நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நேற்று பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன் நேற்று ஆய்வு செய்தார். கால்வாய் துவங்கும் கீரனுார் அணைக்கட்டில் துவங்கி 30 கி.மீ., துாரம் உள்ள கணக்கன்குப்பம் வரையில் கால்வாயை பார்வையிட்டார்.திண்டிவனம் உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் நீர்வளத்துறை பணி ஆய்வாளர்கள், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க தலைவர் அன்பழகன், துணை தலைவர் சேகர், ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின் போது தண்ணீர் செல்வதற்கு தடைகள் உள்ள பகுதிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், பருவமழையின் போது தண்ணீர் செல்வதற்கு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தற்காலிகமான சீரமைப்புகள் செய்யப்படும் என்றும், விரைவில் நிரந்தர பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகளிடம் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி