உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி மோதி திருமண மண்டப உரிமையாளர் பலி

லாரி மோதி திருமண மண்டப உரிமையாளர் பலி

மயிலம்: மயிலம் - புதுச்சேரி சாலையைச் சேர்ந்தவர் ராஜ்கண்ணு, 42; திருமண மண்டப உரிமையாளர். இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மயிலம் பஸ் ஸ்டாண்ட் டீ கடையில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, புதுச்சேரி மார்க்கமாக கூட்டேரிப்பட்டு நோக்கி சென்ற லாரி, ராஜ்கண்ணு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்கண்ணு இறந்தார்.முண்டிம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ