மேலும் செய்திகள்
அரசு மகளிர் கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு
01-Jul-2025
மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இக்கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் புத்தாக்க செயற்பாடுகளுடன் துவங்கியது. அதனையொட்டி, முதலாமாண்டு மாணவிகளுக்கு கல்லுாரி சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியர் தேவி வரவேற்றார்.ஆங்கில துறை பேராசிரியர் கவிதா சிறப்புரையாற்றினார். மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
01-Jul-2025