உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் துணை ஜனாதிபதி எங்கே? செல்வப்பெருந்தகை கேள்வி

முன்னாள் துணை ஜனாதிபதி எங்கே? செல்வப்பெருந்தகை கேள்வி

விழுப்புரம்: முன்னாள் துணை ஜனாதிபதியை காணவில்லை என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமையை பறிப்பது, மக்கள் பணத்தை, பண மதிப்பிழப்பு மூலம் பிடுங்குவது, ஜி.எஸ்.டி., வரியை 40 சதவீதம் வரை உயர்த்தி மக்களுக்கு வரியை சுமத்துவது என மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. முன்னாள், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. பா.ஜ.,வினர் அவரை சிறைபிடித்து இருக்கிறார்களா. மக்களிடம் அவர் செல்வதை பா.ஜ., அரசு தடுத்தால், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் அரசா என அக்கட்சி தலைவர்கள் கூற வேண்டும். அவரை வெளியில் வர விடாமல் தடுக்கும் சக்தி யார். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். தி.மு.க., கூட்டணி 50 சதவீதத்திற்குமேல் வாக்குகள் பெறும். காமராஜர் காலத்தில் இருந்து காங்., கமிட்டி சொத்துக்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. அவைகளை பாதுகாக்க காவல் துறையும், வருவாய் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்., சொத்துக்களை அபகரிக்க நினைப்பவர்களை கண்டறிந்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பீகார் தேர்தல் பிரசார நடைபயணம், பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் நாளை (இன்று) கலந்து கொள்கிறார். அங்கு, வரலாறு காணாத வெற்றியை காங்., கட்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை