மேலும் செய்திகள்
ரயிலில் ஏறியபோது 'ஷாக்' படுகாயம் அடைந்தவர் பலி
10-Oct-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.வேலுாரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 50; இவர், கடந்த மாதம் 29ம் தேதி, அவரது தாயார் நினைவு நாளையொட்டி, சொந்த ஊரான, விழுப்புரம் மாவட்டம், ஆயந்துார் கிராமத்திற்கு வந்துள்ளார்.மீண்டும் அங்கிருந்து கடந்த 5ம் தேதி வேலுார் செல்வதற்காக ஆயந்துார் ரயில் நிலையத்தில் ரயில் ஏறியுள்ளார். ஆனால், அவர் வேலுார் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Oct-2024