வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Proportionately corruption will continue to dominate
செஞ்சி: மாவட்டத்தில் குற்ற செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், மது பாட்டில்கள், கஞ்சா கடத்துவதை தடுக்க ரோந்து போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தின் மிக முக்கியமான மாவட்டம். தமிழகத்தின் தலைநகரான சென் னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய நகரம் விழுப்புரம். மாவட்டத்தின் வழியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நாகப்பட்டினம், புதுச்சேரி கடற்கரை சாலை, துாத்துக்குடி வேலுார் தேசிய நெடுஞ்சாலை, வேலுார், துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கும்பகோணம், தஞ்சாவூர் வி.கே.டி., என மிக முக்கிய சாலைகள் உள்ளன. இது மட்டுமின்றி கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நிலகிரி மாவட்டங்களுக்கும் விழுப்புரம் வழியாகவே செல்ல வேண்டும். இத்தனை மாவட்ட மக்கள் பயணிக்கும் மிக முக்கிய வழியாக விழுப்புரம் மாவட்டம் இருப்பதால், இவர்களின் பாதுகாப்பு, நிம்மதியான பயணத்தை உறுதி செய்ய வேண் டிய கடமை விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு உண்டு. சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்களும், சமூக விரோ திகளும் இந்த மாவட்டம் வழியாக கடந்து போக வாய்ப்பு ள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் ரோந்தையும், சோதனையையும் அதிகரித்தால் குற்றங்கள் நடக்கும் வாய்ப்பை குறைக்க முடியும். வெளி மாவட்ட குற்றவாளிகள் கடந்து போகாமல் தடுக்க முடியும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். சமீப காலமாக மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் கண்காணிப்பும், ரோந்து வரும் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். பெரும்பாலான நேரம் எதேனும் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கின்றனர். அழைப்பு வந்தால் செல்லும் ஆம்புலன்ஸ் போன்று நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அழைப்பு வந்தால் செல்கின்றனர். வாகன சோதனையிலும் ஈடுபடுவது குறைந்து வருகிறது. இதற்கு உதாரணமாக, கடந்த ஒரு ஆண்டில் போதை மருந்து குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்பவர்கள், மது பாட்டில் கடத்துபவர்கள் குறித்து மாவட்ட போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கைகள் உள்ளன. உள்ளூர் போலீசாருக்கும், நெடுஞ்சாலை போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரியாமல் உள்ளது. மாவட்டம் முழுதும் பைபாஸ் சாலை ஓரங்கள் திறந்த வெளி பாராக மாறி விட்டது. பொது இடத்தில் கூட்டமாக மது அருந்துகின்றனர். இதை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாலை ஓரம் மது அருந்துபவர்களால் சாலை விபத்து நடப்பதுடன், குற்ற சம்பவங்களும் அதிகரிக்கிறது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மாவட்டத்தில் பைபாஸ்களில் அடிக்கடி ரோந்து சென்று பொது இடத்தில் மது அருந்துவதை தடுக்க வேண்டும். போலீசாரின் ரோந்தை அதிகரித்தால் மாவட்டத்தில் போதை பொருள், கஞ்சா, மது பாட்டில் கடத்தல், மணல் கடத்தலை தடுக்க முடியும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நிரப்பப்படாமல் உள்ள காலி பணி இடங்களுக்கு போலீசாரை நியமித்து இரவு ரோந்தை அதிகரிக்கவும், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ், பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் உலா போலீஸ், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து விட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என்ற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ், பிரஸ் ஸ்டிக்கரை இந்த துறைக்கு சம்மந்தம் இல்லாத சமூக விராதிகளும் ஒட்டி கொண்டு திரிகின்றனர். இதை தடுக்க வழிகாட்டு நெறி முறைகளை உருவாக்கி போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Proportionately corruption will continue to dominate