மேலும் செய்திகள்
அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
08-Sep-2025
அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
08-Sep-2025
விழுப்புரம்; விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவில் அய்யனார் குளத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அய்யனார் குளத்தைச் சுற்றியுள்ள தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி ஆகியவை மிக குறுகலான பகுதியாக அமைந்துள்ளது. இந்த வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ெபாதுமக்கள் நடந்து ெசல்வதற்கு கூட அவதிப்படும் நிலை உள்ளது. நகரின் முக்கிய வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள எம்.ஜி., ேராடு மற்றும் திரு.வி.க., வீதியை இணைக்கும் அய்யனார் குளத்தைச் சுற்றியுள்ள வீதிகளை அகலப்படுத்திட ேவண்டும். இந்து சமய அறநிலைய துறையினர், அய்யனார் ேகாவில் குளத்தைச் சீரமைக்கும்போது, அங்குள்ள சாலையோர கடைகளை பின்புறம் அமைக்கும் வகையில், இடவசதி ஏற்பாடு ெசய்திட ேவண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த, அய்யனார் குளத் தெருக்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்திட ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08-Sep-2025
08-Sep-2025