உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ... சமரச முயற்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள்

ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ... சமரச முயற்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள்

முதல்வர் ஸ்டாலின் நடத்தும் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, புகார் தெரிவிக்காமல் இருக்க சமாதான படலத்தை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னைகளை சரி செய்யும் வகையில் தொகுதி, மண்டல பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டது.அப்படி இருந்தும் பூசல் தீர்க்க முடியாமல் நாளுக்கு நாள் அதிகமாகியது. இதன் காரணமாக தமிழகம் முழுதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், நானே நிர்வாகிகளை நேரில் சந்திக்க போகிறேன். 'ஒன் டூ ஒன்' என நானே நிர்வாகிகளிடம் பேசப்போகிறேன் என ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி 'உடன் பிறப்பே வா' தலைப்பில் சென்னை அறிவலாயத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. முதல்கட்டமாக விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட 9 சட்டசபை தொகுதிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒன்றிய, நகர பேரூராட்சி செயலாளர்கள் மட்டும் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், பிரச்னைக்குரிய விழுப்புரம் தொகுதி சந்திப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதிகளில், மயிலம், திண்டிவனம் தொகுதி சந்திப்பு நாள் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியாக உள்ளது. விழுப்புரம் தொகுதி சந்திப்பில் லட்சுமணன் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக உள்ள மஸ்தானின் எதிர் அணியில் உள்ளவர், ஸ்டாலினிடம் உட்கட்சி பூசல் குறித்து தெரிவிக்கும் மனநிலையில் உள்ளனர்.குறிப்பாக மஸ்தானின் எதிர் அணியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் சிலர் தயாராகி வருவது, மஸ்தான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மஸ்தான் ஆதரவு பிரமுகர்கள் சிலர், எதிர் அணியில் உள்ள நபர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம் என சமாதான படலத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை