உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தல் பெண் கைது

மதுபாட்டில் கடத்தல் பெண் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று மாலை இந்திராகாந்தி பஸ் நிலையப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பெண்ணை சோதனை செய்ததில், அவர் 50 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு, மலைக்கோவில் தெருவை சேர்ந்த நரிக்குறவ பெண் மனோகரி, 37; என தெரிந்தது. உடன் அவரை திண்டிவனம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை