உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி

முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி

வானூர்: ஆரோவில் அருகே முன்னால் சென்ற டிராக்டரின் பின்பக்கமாக பைக் மோதிய விபத்தில், இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கிளியனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் மகள் அஸ்வினி, 24; இவர் புதுச்சேரியில் ஹோம்கேர் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 9;00 மணிக்கு, அதே ஊரை சேர்ந்த வேலு மகன் அஜய், 24; என்பவருடன், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட் அடுத்த தாபா ஓட்டல் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென வலது புறமாக திரும்பியுள்ளது. அதில், மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அஸ்வினி தாய் ரேவதி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை