வீட்டில் நகைகள் மாயம் போலீசில் பெண் புகார்
செஞ்சி : வீட்டில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை காணவில்லை என போலீசில் பெண் புகார் செய்துள்ளார். செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி பச்சையம்மன், 48; இவர், செஞ்சி போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது வீட்டு படுக்கை அறையில் துணிப்பையில் சுற்றி வைத்திருந்த 3 சவரன் தங்க செயின், 1சவரன் கம்மல், 1 சவரன் ஜிமிக்கி, 2 கிராம் மதிப்புள்ள மோதிரம் மற்றும் தங்க நாணயம் என 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை காணவில்லை எனவும், இது குறித்து அதே பகுதி சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.