உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ மோதி தொழிலாளி பலி 

ஆட்டோ மோதி தொழிலாளி பலி 

திண்டிவனம், : திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.செஞ்சி வட்டம், நாகந்துார் சர்ச் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பக்தசீலன், 37; சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் திண்டிவனம் அருகே தீவனுாரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.படுகாயமடைந்த பக்தசீலன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோ குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி