உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

விழுப்புரம்: வளவனுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 49; கூலித் தொழிலாளி. இவர், விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ