மேலும் செய்திகள்
தேசிய சுற்றுச்சூழல் தினம்
06-Jun-2025
வானுார் : கிளியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் அப்தாபேகம் தலைமையில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழி ஏற்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பாட்டு போட்டி, பேச்சு போட்டியும், இன்றைய சூழலில் சுற்றுப்புறத்தை பாதுகாப்பது நாளைய தலைமுறையினரான மாணவரின் பொறுப்பா? அல்லது பெற்றோர்களான பொதுமக்களின் பொறுப்பா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆசிரியர் லட்சுமி ரேகா சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பேசினார். பள்ளி ஆசிரியர்கள் ஜனனி, வள்ளி, செல்வி பங்கேற்றனர்.
06-Jun-2025