உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அஞ்சலகத்தில் உலக தபால் தினம்

அஞ்சலகத்தில் உலக தபால் தினம்

செஞ்சி; செஞ்சி அஞ்சலகத்தில் உலக தபால் தினத்தை முன்னிட்டு, செல்வமகள் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உலகளாவிய தபால் ஒன்றியம் நிறுவப்பட்டதன் நினைவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை உலக தபால் தினம் வார விழா கொண்டாடி வருகின்றனர். இதன்படி செஞ்சி அஞ்சலகத்தில் உலக தபால் தினம் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்ட பயனாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புதுச்சேரி கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொள்ளு காவியா சான்றிதழ்களை வழங்கினார். இதில் உட்கோட்ட ஆய்வாளர் அனு, செஞ்சி துணை அஞ்சலக தலைவர் தங்கராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ