சட்ட உதவி ஆலோசனை பணியிடங்கள் எழுத்து தேர்வு
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேர்காணல் வரும் 22ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திக்குறிப்பு :விழுப்புரம் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் அலுவலக உதவியாளர், எழுத்தர், அலுவலக பியூன் ஆகியவற்றுக்கான எழுத்து தேர்வு, நேர்காணல் வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இது குறித்து அனைத்து விரிவான விபரங்கள், இதர தகவல்களை https://viluppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.