மேலும் செய்திகள்
மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
06-Dec-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, மஞ்சள் பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்த நிறுவனங்களுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லுாரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக 10 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரை செய்யப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
06-Dec-2025