உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அரசு கல்லுாரியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திண்டிவனம் அரசு கல்லுாரியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திண்டிவனம்: திண்டிவனம் அரசு கலை கல்லுரியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையின் துவக்க விழா நடந்தது.தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரிகளில் ௨௦25-26ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக http;//wwwtngasa.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த 7ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திண்டிவனத்திலுள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி யில் மாணவர் சேர்க்கை உதவி மையம் துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் தங்கராஜன் துவக்கி வைத்தார். இதில் கல்லுாரி மாணவர்கள் சேர்க்கை உதவி மையம் குழுவின் உதவிபேராசிரியர் கோகுலகுமார், பேராசிரியர் கமலக்கண்ணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்னர்.அரசு கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த உதவி மையத்தின் மூலம் விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லுாரியில் சேர விரும்பினால், இம் மையத்தை அணுகி இணைய வழி மூலம் விண்ணப்பிப்பதற்காக ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27ம் தேதியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி