எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: எனது பாரதம் குடிமை பாதுகாப்பு தன்னார்வலராக பதிவு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட இளையோர் அலுவலர் சஞ்சனா வாட்ஸ் செய்திக்குறிப்பு;மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் 18 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களை எனது பாரதம் குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை பேரழிவுகள், விபத்துகள், பொது அவசர நிலைகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைகளில் மத்திய, மாநில அரசு நிர்வாகத்திற்கு உதவும் வகையில் தன்னார்வப்படையை உருவாக்குவதை இம்முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது.மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை, போக்குவரத்து மேலாண்மை, கூட்டக் கட்டுப்பாடு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் உதவுதல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்து ஆர்வமுள்ள இளைஞர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்யலாம்.தற்போதுள்ள எனது பாரதம் தன்னார்வலர்கள், தேசத்திற்கு சேவை செய்ய விரும்பும் புதிய நபர்கள் சேரலாம். இளைஞர்கள் https://mybharat.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலரை நேரிலோ அல்லது 04146 -220699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.