உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழை பாதிப்பு தகவல் தெரிவிக்கலாம்

மழை பாதிப்பு தகவல் தெரிவிக்கலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மழை பாதிக்கப்படும் இடங்கள் குறித்த தகவல் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில், மாவட்டத்தில், கனமழை பெய்து வருவதால், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தங்களின் இருப்பிடத்தை சுற்றியுள்ள ஆபத்தான பழைய கட்டடங்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறைக்கு தகவல் அளித்து, அவர்களை பாதுகாப்பு முகாம்களில் தங்குவதற்கு உதவிட வேண்டும். மேலும், அவசர உதவிக்கு: 1077, 94981 00485, 04146-223265 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ