உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

விழுப்புரம்; விழுப்புரத்தில் குழந்தை இல்லாததை கணவர், மாமியார் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி கலையரசி, 25; இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. கலையரசிக்கு குழந்தை இல்லாததால் கணவரும், மாமியார் ஜெயமாலாவும் அடிக்கடி திட்டி வந்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த கலையரசி நேற்று வீட்டின் மொட்டை மாடியில் உள்ள போர்டிகோவில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பெண்ணின் தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை