உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் இளம்பெண் பலி

பைக் விபத்தில் இளம்பெண் பலி

விழுப்புரம்:விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் அருகே மழவராயனுார் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் மனைவி சிவரஞ்சனி,23; இவர், கடந்த 7 ம் தேதி, கணவரோடு பைக்கில் எல்லீஸ்சத்திரத்தில் இருந்து ஏனாதிமங்கலம் நோக்கி சென்றார். மரகதபுரம் கிராமத்தில் உள்ள சாலை வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த நபர், பைக்கை வேகமாக ஓட்டி சென்றதால் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிவரஞ்சனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை