மேலும் செய்திகள்
ரூ.4.50 லட்சம் மோசடி சகோதரர்கள் மீது வழக்கு
16-Apr-2025
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேணு மகன் பாலாஜி,39; இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சக்கரவர்த்தி, திருப்பத்துாரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சாந்தகுமார், சென்னையை சேர்ந்த பழனி மனைவி ஜெயந்தி ஆகிய மூன்று பேரும், பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.70 லட்சம் வாங்கினர். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில், மூங்கில்துறைப்பட்டு போலீசார் கடந்த, 2024ம் ஆண்டு, அக்., மாதத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். நேற்று முன்தினம், திருப்பத்துாரில், சாந்தகுமாரை, 33; கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
16-Apr-2025