உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

 கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

விழுப்புரம்: வெள்ளிமேடுபேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வெள்ளிமேடுபேட்டை சப் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார், நெடுந்தோண்டி பஸ் நி றுத்தம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, மொபட்டுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், நெடுந் தோண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை, 36; என்பதும், விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா, மொபட்டை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி